வெள்ள சேதம்: முழுமையாக பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை
By DIN | Published On : 13th November 2021 06:34 PM | Last Updated : 13th November 2021 06:35 PM | அ+அ அ- |

திருவாரூர் மாவட்டத்தில் மழை சேதங்களை பார்வையிட்ட பின் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்.
மழையால் முழுமையாக சம்பா தாளடி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் மழை சேதங்களை பார்வையிட்ட பின் மன்னார்குடியில் அவர் அளித்த பேட்டி, ஆட்சிக்கு வந்தது முதல் தூர் வாரும் பணிகளைத் திறம்பட செய்ததால் பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க- திருப்பதியில் நாளை தென்மண்டல குழு கூட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
முந்தைய அதிமுக ஆட்சியில் நீர் மேலாண்மையை சரியாக கையாளாததால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. பயிர் காப்பீடு குறித்து மத்திய அரசுடன் கால அவகாசம் கோரி தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிர்களில் தேங்கியுள்ள வெள்ள நீர் விரைவாக வடிய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நடவுப் பயிர்கள் பாதிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் நடவுப் பணிகள் மேற்கொள்ளவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தூர்வாரும் பணிகள் திறம்பட செய்ததால் கடைமடை வரை காவிரி நீர் சென்றுள்ளது என்றார்.