கூத்தாநல்லூர் : மருவத்தூர் கோயிலுக்கு ரூ.78 ஆயிரம் அரிசி மூட்டை
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரிலிருந்து, ரூ.78 ஆயிரம் மதிப்புள்ள அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டது.


திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரிலிருந்து, ரூ.78 ஆயிரம் மதிப்புள்ள அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டது.
கூத்தாநல்லூர் கம்பர் தெருவில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்திலிருந்து, ரூ.78 ஆயிரம் மதிப்புள்ள, 2,000 கிலோ அளவுள்ள, 78 அரிசி மூட்டைகளை, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு அனுப்பி வைத்தனர்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் 1988ஆம் ஆண்டு, 34 ஆண்டுகளுக்கு முன்பு 100 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்டது. தற்போது, 750க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் வழிப்பாட்டு மன்றம் இயங்கி வருகிறது.
ஆண்டுதோறும் மாலையணிந்து, இருமுடி கட்டி, 14 பேருந்துகளில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்குச் சென்று வருகிறோம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் ஆதிபராசக்தி வழிப்பாட்டு மன்றத்திற்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
மேலும், செவ்வாடை அணிந்த சக்திகள் மற்றும் பக்தர்கள் கரோனா விதிமுறைகளை தமிழக அரசு தளர்த்தி விட்டாலும், இங்கு வரக்கூடிய பக்தர்கள் விதிமுறைகளுக்குட்பட்டு செயல்படுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டு சித்ரா பெளர்ணிமிக்காகவும், கூத்தாநல்லூர் வழிப்பாட்டு மன்றத்திலிருந்து, அரிசி, து.பருப்பு மற்றும் எண்ணெய்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
அதன்படி, 2022 ஆம் ஆண்டுக்கு, 2000 கிலோ எடை கொண்ட, ரூ.78 ஆயிரம் மதிப்புள்ள 78 அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டன.மன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மன்றத் தலைவர் எம்.சாம்பசிவம், துணைத் தலைவர் சிவ.வரதராசன், நிர்வாகிகள் கேசவன், சுரேந்திரன் மற்றும் நளினி அம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...