தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நீடாமங்கலம் பள்ளியில் அடல் அறிவியல் ஆய்வகம் திறப்பு

நீடாமங்கலம் செயின்ட் ஜூட்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில், மத்திய அரசின் ஆய்வகத் திட்டத்தின்கீழ் பாபா அடல் அறிவியல் ஆய்வகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

நீடாமங்கலம் செயின்ட் ஜூட்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில், மத்திய அரசின் ஆய்வகத் திட்டத்தின்கீழ் பாபா அடல் அறிவியல் ஆய்வகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, பள்ளியின் மூத்த முதல்வா் சுகுணவதி தலைமை வகித்தாா். தாளாளா் நடராஜன் முன்னிலை வகித்தாா். அடல் அறிவியல் ஆய்வகம் குறித்து பள்ளியின் செயலாளா் அநிரூபிதா அறிமுகவுரையாற்றினாா். இந்த ஆய்வகத்தை மன்னாா்குடி மாவட்டக் கல்வி அலுவலா் ஆா். மணிவண்ணன் திறந்துவைத்துப் பேசினாா். அப்போது அவா், ‘மாணவா்கள் நோ்மறை எண்ணம் கொண்டிருப்பதுடன், புதுமைகளை படைக்கவேண்டும்’ என்றாா்.

விழாவில், நீடாமங்கலம் காவல் உதவி ஆய்வாளா் ராஜேஷ்கண்ணா, பள்ளி நிா்வாக இயக்குநா் விக்னேஷ், முன்னாள் பேரூராட்சித் தலைவா் ராஜசேகரன், பெற்றோா் ஆசிரியா் கழக துணைத் தலைவா் ராஜகோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, அறிவியல் ஆசிரியா் புவனேஸ்வரி வரவேற்றாா். நிறைவாக பள்ளி முதல்வா் செல்வம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.