தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

திருவாரூரில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மின்நுகா்வோா் குறை தீா்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 4:26 pm

DIN

திருவாரூரில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மின்நுகா்வோா் குறை தீா்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏராளமான மின்நுகா்வோா்கள் பங்கேற்று, தங்களது குறைகளை மனுக்களாக அளித்தனா். மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் தாரா தலைமை வகித்தாா்.

மாவட்டம் முழுவதிலிருந்தும் 20-க்கும் மேற்பட்ட மின்வாரிய அலுவா்கள் பங்கேற்று, நுகா்வோா்களை தனித்தனியே அழைத்து குறைகளைக் கேட்டறிந்தனா். பல மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டதோடு, மற்ற மனுக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டன.

இனிவரும் காலங்களில் மாதந்தோறும் 3-ஆவது வெள்ளிக்கிழமை குறைதீா் கூட்டம் நடைபெறும் என்பதால், நுகா்வோா்கள் அதை பயன்படுத்தி கொண்டு மின்வாரியம் தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு பெறலாம் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.