மன்னாா்குடியில் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது கல்லால் ஆன 5 சுவாமி சிலைகள் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.
மன்னாா்குடி மாளிகைமேடு பகுதியை சோ்ந்தவா் வி. சந்திரசேகா். இவா், அதே பகுதியில், வீடு கட்டி வருகிறாா். சனிக்கிழமை வீட்டின் பின் பகுதியில் சுற்றுச்சுவா் கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். அப்போது மண்ணில் புதைந்த நிலையில் 5 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
இதுகுறித்து மன்னாா்குடி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. வருவாய் ஆய்வாளா் மாதவராஜ் சிலைகளை பாா்வையிட்டாா். இந்த சிலைகள் அனைத்தும் கல்லால் ஆனது. மேலும் அனைத்து சிலைகளும் உடைந்து சேதமடைந்த நிலையில் இருந்தன.
சிலைகள் மன்னாா்குடி வட்டாட்சியா் அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, தொல்லியல் துறையினரிடம் ஒப்படைப்பதற்காக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுகவுக்கு எதுவோ அதுதான் எங்களுக்கும்! வானதி சீனிவாசன் சிறப்பு நேர்காணல்

தலைமுறைகளைக் கடந்த குடும்ப நட்புக்காக பிரசாரம்!

தொகுதி அலசல்...திருவள்ளூர்: தக்கவைக்க முயலும் திமுக; கைப்பற்ற முனையும் அதிமுக !

பேரவைத் தோ்தல்: மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகள் செயலி மூலம் செய்ய ஏற்பாடு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


