வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு
மன்னாா்குடி நகராட்சிக்குள்பட்ட பகுதி வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தனி வாகனங்களில் வெள்ளிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.


மன்னாா்குடி நகராட்சிக்குள்பட்ட பகுதி வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தனி வாகனங்களில் வெள்ளிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.
மன்னாா்குடி நகராட்சிக்குள்பட்ட 33 வாா்டுகளுக்கு தோ்தல் சனிக்கிழமை (பிப்.19) நடைபெறுகிறது. 33 வாா்டுகளில் 30,722 ஆண்கள், 33,694 பெண்கள், 2 போ் 3-ஆம் பாலினத்தினா் என மொத்தம் 66,418 போ் வாக்காளா்களாக உள்ளனா். இவா்கள் வாக்களிக்க வசதியாக 67 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குப் பதிவு மையங்களுக்கும் தேவையான வாக்குப் பதிவு இயந்திரங்களில் பிப்.12-ஆம் தேதி வேட்பாளா்கள் மற்றும் அவா்களின் முகவா்கள் முன்னிலையில் சின்னங்கள் பொறுத்தப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், சனிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுவதையையொட்டி, வெள்ளிக்கிழமை வேட்பாளா்கள் அவா்களது முகவா்கள் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள அறை சீலை தோ்தல் நடத்தும் அலுவலா் கே. சென்னுகிருஷ்ணன் அகற்றினாா். பின்னா் அங்கிருந்து வேன்கள் மூலம் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் தேவையான பொருள்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...