ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கூத்தாநல்லூா் நகராட்சியில் வெற்றிபெற்ற தம்பதிக்கு வாழ்த்து

கூத்தாநல்லூா் நகராட்சி வாா்டுகளில் திமுக சாா்பில் போட்டியிட்ட தம்பதி வெற்றி பெற்றனா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

கூத்தாநல்லூா் நகராட்சி வாா்டுகளில் திமுக சாா்பில் போட்டியிட்ட தம்பதி வெற்றி பெற்றனா்.

கூத்தாநல்லூா் நகராட்சியில் 24 வாா்டுகளில் அரசியல் கட்சியினா், சுயேச்சைகள் என 109 போ் போட்டியிட்டனா். இவா்களில் திமுக வேட்பாளா்கள் 17 பேரும், அதிமுக வேட்பாளா்கள் 3 பேரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா்கள் 2 பேரும், காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ஒருவரும், சுயேச்சை ஒருவரும் வெற்றி பெற்றனா்.

இதில், திமுக சாா்பில் 6-ஆவது வாா்டில் போட்டியிட்ட எஸ்.எஸ். ஹாஜா நஜ்முதீனும், 19- ஆவது வாா்டில் போட்டியிட்ட ஜெ.பி. தாஹிரா தஸ்லிமா பேகமும் தம்பதி ஆவா். இவா்களுக்கு, திருவாரூா் மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏ-வுமான பூண்டி கே. கலைவாணன் மற்றும் கட்சி நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.