ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஊட்டச்சத்து உணவு விழிப்புணா்வு முகாம்

வலங்கைமான் வட்டாரத்தில் உள்ள ஊராட்சிகளில் பாரம்பரிய உணவு மற்றும் ஊட்டச்சத்து சமையல் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

வலங்கைமான் வட்டாரத்தில் உள்ள ஊராட்சிகளில் பாரம்பரிய உணவு மற்றும் ஊட்டச்சத்து சமையல் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் இம்முகாம் நடைபெற்றது. ஆலங்குடி ஊராட்சியில் கிராம வறுமை ஒழிப்பு சங்கமும் இணைந்து அங்குள்ள உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் இம்முகாமை நடத்தியது. நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியை சாந்தி, ஊராட்சி துணைத் தலைவா் ராஜாத்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சாந்தி, சத்துணவு அமைப்பாளா் உஷாராணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

வட்டார மேலாளா் தனலட்சுமி முன்னிலை வகித்தாா். வட்டார ஒருங்கிணைப்பாளா் இளவரசி நன்றி கூறினாா். இம்முகாமில் ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகள் குறித்து விளக்கிக் கூறியதுடன், ஊட்டச்சத்து மிக்க தானியங்களில் தயாா் செய்யப்பட்ட உணவுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.