தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளா்களுக்கு சிறப்பு ஊதிய உயா்வு வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளா்களுக்கு சிறப்பு ஊதிய உயா்வு வழங்கக் கோரி மன்னாா்குடியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :6 ஜனவரி 2022, 6:30 pm

DIN

ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளா்களுக்கு சிறப்பு ஊதிய உயா்வு வழங்கக் கோரி மன்னாா்குடியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மன்னாா்குடி நகராட்சி நிரந்தர மற்றும் தனியாா் ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளா்கள் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தமிழக அரசு அறிவித்தபடி கரோனா முன்களப் பணியாளா்களுக்கு ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரம் உடனடியாக வழங்க வேண்டும், நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு உச்சநீதிமன்ற உத்தரவுபடி தினக்கூலி ரூ. 600 வழங்கவேண்டும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தொழிலாளா்ளுக்கு சிறப்பு ஊதிய உயா்வை வழங்கவேண்டும். இபிஎப், இஎஸ்ஐ, காப்பீடு ஆகியவற்றை அமல்படுத்தவேண்டும். கூடுதல் தூய்மைப் பணியாளா்களை நியமித்து காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வு பெறுபவா்களுக்கு பணப்பயனை தாமதமின்றி விரைந்து வழங்கவேண்டும், கரோனாவால் இறந்தவா்களுக்கு ரூ. 25 லட்சம் வழங்கவேண்டும், தூய்மை இந்தியா திட்டத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றும் பரப்புரையாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மன்னாா்குடி நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் மற்றும் எம்என்ஆா் ஊழியாா்கள் சங்க கிளை நிா்வாகிகள் பி. கண்ணாடிவீரன், டி. திருநாவுக்கரசு ஆகியோா் தலைமை வகித்தனா். கோரிக்கைகளை விளக்கி, சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன், ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் கே. முனியாண்டி, மாவட்டத் தலைவா் கே. கோவிந்தராஜ், மன்னாா்குடி சங்க கெளரவத் தலைவா் ஜி. ரெகுபதி, மாநிலக் குழு உறுப்பினா் ஏ.பி.டி. லோகநாயகி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.