ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

எம்ஜிஆர் பிறந்தநாள்: மன்னார்குடியில் அதிமுகவினர் கொண்டாட்டம்

மன்னார்குடியில் அதிமுக நிறுவனத் தலைவர் முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 105வது பிறந்தநாள் விழா அதிமுகவின் சார்பில் திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
மன்னார்குடியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கும் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் ஏம்எல்ஏ உள்ளிட்டோர்.
Updated On :1 பிப்ரவரி 2024, 8:09 am

DIN

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக நிறுவனத் தலைவர் முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 105வது பிறந்தநாள் விழா அதிமுகவின் சார்பில் திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது.

கீழவீதியில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்டச் செயலருமான ஆர்.காமராஜ் எம்எல்ஏ தலைமையில், நகர்மன்ற முன்னாள் தலைவர் சிவா. ராஜமாணிக்கம்,நகரச் செயலர் ஆர்.ஜி.குமார் ஆகியோர் முன்னிலையில் ஊர்வலமாக வந்து தெற்கு வீதி சந்திப்பில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெ.ஜெயலலிதா ஆகியோது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர், அப்பகுதியில் உள்ளவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மன்னார்குடி மேற்கு ஒன்றியச் செயலர் கா.தமிழ்ச்செல்வம், பேரவை மாவட்ட செயலர் பொன்.வாசுகிறாம் , மன்னார்குடி ஒன்றியக்குழு தலைவர் டி.மனோகரன்,மகளிர் அணி மாவட்டத் தலைவர் டி.சுதா, இளைஞர் இளம் பெண்கள் பாசறை துணைச் செயலர் ஏ.புவனேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.