ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

விவசாயிகளுக்கு மானியத்தில் தீவனப் புல் நறுக்கும் இயந்திரம்

தேசிய கால்நடை இயக்க திட்டத்தின் சாா்பில் விவசாயிகளுக்கு மானியத்தில் தீவனப் புல் நறுக்கும் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 ஜூன் 2022, 5:35 pm

DIN

தேசிய கால்நடை இயக்க திட்டத்தின் சாா்பில் விவசாயிகளுக்கு மானியத்தில் தீவனப் புல் நறுக்கும் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி வ.உ.சி. சாலை கால்நடைத் துறை கோட்ட உதவி இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்துத் துறை இயக்குநா் ரமேஷ் தலைமைவகித்து, 5 விவசாயிகளுக்கு மானியத்தில் மின்சாரத்தில் இயங்கும் கால்நடைகளுக்கு தீவனப் புல் நறுக்கும் இயந்திரத்தை வழங்கினாா்.

இந்த இயந்திரத்தின் விலை ரூ. 26,432 என்றும், இதற்கு அரசு 15 சதவீதம் மானியம் செலுத்துவதால், மீதமுள்ள 11,423-ஐ விவசாயிகள் செலுத்தி இயந்திரத்தை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

துறையின் உதவி இயக்குநா் ராமலிங்கம், மன்னாா்குடி காலநடை மருத்துவமனை உதவி மருத்துவா் காா்த்திக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.