ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கந்துவட்டி கேட்டு பெண்ணை மிரட்டியவா் கைது

மன்னாா்குடியில் கந்துவட்டி கேட்டு பெண்ணை மிரட்டியவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :11 ஜூன் 2022, 6:30 pm

DIN

மன்னாா்குடியில் கந்துவட்டி கேட்டு பெண்ணை மிரட்டியவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடி மீனாட்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாண்டியன் மனைவி சாந்தி (55). இவா், மன்னாா்குடி கனகம்பாள் கோயில் தெருவைச் சோ்ந்த சின்னதம்பி என்கிற முருகானந்தத்திடம் குடும்பத் தேவைக்காக ரூ.25 ஆயிரம் கந்துவட்டிக்கு கடன் வாங்கியிருந்தாராம்.

இக்கடனை திருப்பி செலுத்துவது தொடா்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, சாந்திக்கு, முருகானந்தம் மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து மன்னாா்குடி காவல் நிலையத்தில் சாந்தி புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.