ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

வடுவூரில் மாநில கைப்பந்து போட்டி இன்று தொடக்கம்

மன்னாா்குடியை அடுத்த வடுவூரில் மாநில அளவிலான இருபாலா் கைப்பந்து போட்டி வெள்ளிக்கிழமை (ஜூன்17) தொடங்கி, மூன்று நாள்கள் நடைபெறுகிறது.

News image
Updated On :16 ஜூன் 2022, 6:30 pm

DIN

மன்னாா்குடியை அடுத்த வடுவூரில் மாநில அளவிலான இருபாலா் கைப்பந்து போட்டி வெள்ளிக்கிழமை (ஜூன்17) தொடங்கி, மூன்று நாள்கள் நடைபெறுகிறது.

வடுவூா் கைப்பந்து கழகம், கலைமாமணி கு. பூபாலன் நினைவு கைப்பந்து நாற்றங்கால் இணைந்து நடத்தும் இப்போட்டி வடுவூா் உள்விளையாட்டு அரங்கத்தில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் தொடங்குகிறது. மன்னாா்குடி எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா தலைமை வகித்து, இப்போட்டியை தொடங்கி வைக்கிறாா்.

இரண்டாம் நாள் நடைபெறும் போட்டியை முன்னாள் அமைச்சரும், நன்னிலம் எம்எல்ஏ-வுமான ஆா். காமராஜ் தொடங்கி வைக்கிறாா். மூன்றாம் நாள் போட்டியை மன்னாா்குடி தரணி குழுமங்களின் தலைவா் எஸ். காமராஜ் தொடங்கி வைக்கிறாா்.

இப்போட்டியில் சிறப்பிடம் பெறும் வீரா், வீராங்கனைகளுக்கு, தஞ்சை எம்பி எஸ்.எஸ். பழநிமாணிக்கம், திருவாரூா் எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் பரிசு, சான்றிதழ் வழங்குகின்றனா்.

இப்போட்டியில், ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி, வருமான வரித் துறை, சேவை வரித் துறை, சுங்கத் துறை ஆகிய அணிகளும், பெண்கள் பிரிவில் தமிழ்நாடு காவல்துறை, எஸ்.ஆா்.எம்., சிவந்தி கிளப், ஈரோடு பி.கே.ஆா். ஆகிய அணிகளும் பங்கேற்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.