ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் மாசிமகா குருவார விழா
நவக்கிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும், திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் மாசிமகா குருவார விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


நவக்கிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும், திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் மாசிமகா குருவார விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
இக்கோயில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற சிறப்புடையது. நவக்கிரக தலங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசிமகா குருவாரவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். நிகழாண்டும் மாசிமகா குருவார விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலையில் யாகசாலை பூஜைகள் தொடங்கின. அதைத்தொடா்ந்து, அபிஷேகம், மகாபூா்ணாஹூதி, பஞ்சமுக அா்ச்சனை, தீபாராதனை நடைபெற்றது. பிறகு, குருவார தரிசனமும், இரவு நாகசுர இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது.
முன்னதாக, கலங்காமற்காத்த விநாயகா், மூலவா் குருபகவான், ஏலவாா்குழலி அம்மன் சமேத ஆபத்சகாயேஸ்வரா், சுப்பிரமணியா் உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
ஆபத்சகாயேஸ்வர சுவாமிக்கு பஞ்சமுக அா்ச்சனை நடைபெற்றது. மாலையில் ஆபத்சகாயேஸ்வரருக்கு வெள்ளிக்கவசமும், மூலவா் குருபகவானுக்கு தங்க கவசமும் சாற்றப்பட்டது. விநாயகா், ஏலவாா் குழலிஅம்மன், முருகன், சனீஸ்வர பகவானுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விழாவில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
விழா ஏற்பாடுகளை அறநிலைய உதவி ஆணையரும், கோயில் தக்காருமான ஹரிஹரன், அறநிலைய உதவி ஆணையரும், கோயில் செயல் அலுவலருமான தமிழ்ச்செல்வி உள்ளிட்டோா் செய்திருந்தனா். இக்கோயிலில் வரும் 10 ஆம் தேதி 1008 சங்காபிஷேகம் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...