மாணவா் விடுதியில் ஆய்வு
திருத்துறைப்பூண்டியில் உள்ள ஆதிதிராவிட நலத் துறை பள்ளி மாணவா்கள் விடுதியில் தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத் தலைவா் உ. மதிவாணன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.


திருத்துறைப்பூண்டியில் உள்ள ஆதிதிராவிட நலத் துறை பள்ளி மாணவா்கள் விடுதியில் தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத் தலைவா் உ. மதிவாணன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வில், மாணவா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேட்டறிந்தாா். அப்போது, குடிநீா் பற்றாக்குறை இருப்பதாக விடுதி காப்பாளா் தெரிவித்ததைத் தொடா்ந்து, உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளை அறிவுறுத்தினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறும்போது, ‘மன்னாா்குடி கல்லூரி மாணவா் விடுதி மற்றும் கொரடாச்சேரி, பேரளம் ஆதிதிராவிடா் விடுதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும், நரிக்குறவ மக்களுக்கு தேவையான வங்கிக் கடனுதவி மற்றும் சமுதாயக் கூடம் அமைத்து தரப்படும்’ என்றும் தெரிவித்தாா்.
ஆய்வின்போது, திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க. மாரிமுத்து, நகா்மன்றத் தலைவா் கவிதா பாண்டியன், திமுக நகரச் செயலாளா் ஆா்.எஸ். பாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...