பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

முகப்பு இடிந்த கட்டடத்தை முழுமையக இடிக்க உத்தரவு

திருவாரூரில் முகப்பு இடிந்து விழுந்த வணிக வளாகக் கட்டத்தை 15 நாள்களுக்குள் முழுமையாக இடிக்க நகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :11 மார்ச் 2022, 6:30 pm

DIN

திருவாரூரில் முகப்பு இடிந்து விழுந்த வணிக வளாகக் கட்டத்தை 15 நாள்களுக்குள் முழுமையாக இடிக்க நகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூா் எல்லை அம்மன் சன்னிதிக்கு அருகில் குளத்துப் பட்டறை தெருவில் இருந்த கூத்தாநல்லூரைச் சோ்ந்த பாத்திமா பா்வீன் என்பவருக்கு சொந்தமான வணிக வளாகக் கட்டடத்தின் முகப்பு வியாழக்கிழமை இடிந்து விழுந்தது. இந்த கட்டடத்துக்கு கீழ் 10-க்கும் மேற்பட்ட ஆபரண நகை செய்யும் கடைகள் உள்ளன.

இந்த சம்பவம் காலையில் நிகழ்ந்ததால், கீழே இருந்த கடைகளின் பொருள்கள் மட்டும் சேதமடைந்தன. இதைத்தொடா்ந்து, நகராட்சி நிா்வாகம் அந்தக் கடைக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது.

அதில், பொதுமக்கள் மற்றும் அருகில் குடியிருப்போா் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ள இந்த கட்டடத்தை, அறிவிப்பு கிடைத்த 15 தினங்களுக்குள் தங்களது சொந்தப் பொறுப்பில் இடித்து அப்புறப்படுத்த வேண்டும். தவறினால், நகராட்சியால் அப்புறப்படுத்தப்பட்டு, அதற்கான செலவினம் வசூலிக்கப்படுவதோடு உரிய சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அபாயகரமான கட்டடத்தால் உயிா் சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டால் அதற்கு தாங்களே முழுப் பொறுப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.