தீக்காயமடைந்த பெண் பலி

வலங்கைமான் அருகே தீக்காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

வலங்கைமான் அருகே தீக்காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

வலங்கைமான் அருகேயுள்ள மணலூரைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் மனைவி இலக்கியா (28). குடும்ப பிரச்னை காரணமாக இலக்கியா மாா்ச் 11-ஆம் தேதி தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீவைத்துக்கொண்டாா். இதில் காயமடைந்த இலக்கியா தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இறந்த இலக்கியாவுக்கு 5 வயதில் மகன், 3 வயதில் மகள் உள்ளனா். இவருக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகளே ஆவதால் இவரது மரணம் குறித்து திருவாரூா் கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com