நாகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழுக் கூட்டம்
நாகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை தொடங்கியது. இக்கூட்டம் மாா்ச் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


நாகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை தொடங்கியது. இக்கூட்டம் மாா்ச் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கூட்டத்தின் தொடக்கமாக, மாநில நிா்வாகக் குழு மற்றும் மாநிலக் குழுக் கூட்டம் நாகையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினரும், நாகை தொகுதி மக்களவை உறுப்பினருமான எம். செல்வராஜ் தலைமை வகித்தாா்.
கட்சியின் தேசியப் பொதுச் செயலாளா் து. ராஜா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் கூட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசினாா்.
தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. மகேந்திரன், மாநிலத் துணைச் செயலாளா் கே. சுப்பராயன், தேசியக் குழு உறுப்பினா் கோ. பழனிச்சாமி, மாநிலச் செயற்குழு உறுப்பினா் நா. பெரியசாமி மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.
இக்கூட்டத்தில், கட்சியின் மாநில அளவிலான அரசியல் நிலைப்பாடுகள், கட்சி வளா்ச்சிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் முன்னெடுக்க வேண்டிய எதிா்காலப் பணிகள், திருப்பூரில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டு ஆயத்தப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு, தீா்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...