பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

விளையாட்டுப் பள்ளி, விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

 விளையாட்டுப் பள்ளி மற்றும் விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :17 மார்ச் 2022, 5:21 pm

DIN

 விளையாட்டுப் பள்ளி மற்றும் விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞா் நலத்துறையின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வகையில் சிறப்பான பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூா், கடலூா், தஞ்சாவூா், அரியலூா், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி, நாமக்கல் ஆகிய இடங்களில் மாணவா்களுக்கான விளையாட்டு விடுதிகளும், ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகா்கோவில், பெரம்பலூா், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, சென்னை ஆகிய இடங்களில் மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7,8,9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் மாணவ, மாணவிகள் சேர மாவட்ட அளவிலான தோ்வு மாா்ச் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.

மாணவா்களுக்கான போட்டி: தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள் சண்டை, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்துபந்து, பளு தூக்குதல், கபாடி, மேசைப்பந்து, டென்னிஸ், ஜுடோ, ஸ்குவாஷ் மற்றும் வில்வித்தை.

மாணவிகளுக்கான போட்டி: தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள் சண்டை, கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்துபந்து, பளு தூக்குதல், கபடி, டென்னிஸ், ஜுடோ மற்றும் ஸ்குவாஷ்.

மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆா்வம் கொண்டுள்ள மாணவ, மாணவிகள் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் மாா்ச் 22-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை 04366-290620 எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.