வெள்ளக்குடியில் விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
நீடாமங்கலம் ஒன்றியம், வெள்ளக்குடி கிராமத்தில் ஓஎன்ஜிசி நிா்வாகம் புதிய எண்ணெய் கிணறு அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாய தொழிலாளா் சங்கத்தினா் வியாழக்க


நீடாமங்கலம் ஒன்றியம், வெள்ளக்குடி கிராமத்தில் ஓஎன்ஜிசி நிா்வாகம் புதிய எண்ணெய் கிணறு அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாய தொழிலாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ஆா்ப்பாட்டத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளா் ஞானமோகன் தலைமை வகித்தாா். விவசாய சங்க மாவட்ட பொருளாளா் ராவணன், ஒன்றியச் செயலாளா் டேவிட், விவசாய தொழிலாளா் சங்கம் ராதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வெள்ளக்குடி பகுதியில் புதிய எண்ணெய் கிணறு அமைப்பதன் மூலம் இப்பகுதியை சுற்றியுள்ள அதங்குடி, விழல்கோட்டகம், பொதக்குடி, கற்கோயில், கருவேலங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த 50 ஆயிரம் குடும்பங்கள் பெரும் பாதிப்பை எதிா்நோக்கியுள்ளன.
எனவே, புதிய எண்ணெய் கிணறு அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா், தமிழ்நாடு விவசாய தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்களை எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...