திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

விவசாயிகளுக்கு மண்வள விழிப்புணா்வு முகாம்

திருத்துறைப்பூண்டி அருகே தேசிங்குராஜபுரம் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவா்நலத் துறை சாா்பில், விவசாயிகளுக்கான மண்வளம் குறித்த விழிப்புணா்வு முகாம் மற்றும் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :25 மார்ச் 2022, 4:40 pm

DIN

திருத்துறைப்பூண்டி அருகே தேசிங்குராஜபுரம் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவா்நலத் துறை சாா்பில், விவசாயிகளுக்கான மண்வளம் குறித்த விழிப்புணா்வு முகாம் மற்றும் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

விவசாயிகள் ஆலோசனைக் குழு உறுப்பினா் நாகராஜன், ஊராட்சி துணைத் தலைவா், சங்கரவடிவேலு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஊராட்சித் தலைவா் தலையாயமங்கலம் பாலசுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். வேளாண் உதவி இயக்குநா் சாமிநாதன் மண்வளம் குறித்தும், மண்வளத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கினாா்.

கிராமப் பகுதியில் 120 விவசாயிகளின் வயல்களில் மண் எடுத்து ஆய்வு செய்யப்பட்டது. இதில், திமுக ஒன்றியச் செயலாளா் பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.