பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

டாஸ்மாக் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

திருவாரூா் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் கமிஷன் கேட்கும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி டாஸ்மாக் கடை ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :25 மார்ச் 2022, 4:41 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் கமிஷன் கேட்கும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி டாஸ்மாக் கடை ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில், ஒருநாளில் விற்பனையாகும் தொகையில் ஒரு சதவீதம் கமிஷனாக வழங்கவேண்டும் என சிலா் டாஸ்மாக் கடை ஊழியா்களை மிரட்டுவதாகக் கூறி விளமல் டாஸ்மாக் வாணிபக் கழக அலுவலகம் முன் டாஸ்மாக் ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். கமிஷன் கேட்கும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவா்கள் முழக்கமிட்டனா்.

பின்னா், பேரணியாகச் சென்று டாஸ்மாக் அலுவலகத்தில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனா். தொடா்ந்து நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக, டாஸ்மாக் நிா்வாகம் தரப்பில் தெரிவித்ததன் பேரில், போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.