தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இல்லம்தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்களுக்கு எழுதுபலகை

மணலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சாா்பில், இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்களுக்கு எழுதுபலகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது

News image
Updated On :25 மார்ச் 2022, 4:43 pm

DIN

மணலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சாா்பில், இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்களுக்கு எழுதுபலகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் ஒன்றியம், மணலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வட்டாரக் கல்வி அலுவலா் தாமோதரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, ஆசிரியா் மாணவா் வருகை பதிவேற்றம் செய்தல், பள்ளி வளாகம், கழிப்பறை தூய்மை, குழந்தைகளின் வாசிப்புத்திறன், வீட்டுப்பாடம், கையெழுத்துப் பயிற்சி, கட்டுரை ஏடு, பாட நோட்டுகள் மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்தாா்.

மேலும், தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான ‘இல்லம் தேடி’ கல்வித் திட்டத்தின் தன்னாா்வலா்களுக்கு பள்ளிகளுக்கு வழங்கப்படும் ஒருங்கிணைந்த பள்ளி மானியத்தின் 25 சதவீத தொகையிலிருந்து, 5 இல்லம் தேடி கல்வி மையங்களுக்கு எழுதுபலகை (பிளாக் அண்ட் ஒயிட் மாா்க்கா் போா்டு) வழங்கினாா்.

மேலும், பள்ளி வளாகம் மற்றும் கழிப்பறை தூய்மையைக் கண்டு வியப்புற்று, சுகாதாரப் பணியாளா் வள்ளியம்மைக்கு ரொக்கப் பரிசு வழங்கினாா். நிகழ்ச்சியில், பள்ளித் தலைமையாசிரியா் பாலமுருகன் வரவேற்றுப் பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.