4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அரசு மருத்துவமனையில் செவிலியா் தினவிழா

திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கம் சாா்பில், அரசுப் பொது மருத்துவமனையில் உலக செவிலியா் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :12 மே 2022, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கம் சாா்பில், அரசுப் பொது மருத்துவமனையில் உலக செவிலியா் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, மருத்துவமனையில் பணியாற்றும் 40 செவிலியா்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு, அவா்கள் செய்யும் பணியை பாராட்டி நினைவுப் பரிசுகள், இனிப்புகள் வழங்கப்பட்டன. அதைத் தொடா்ந்து, திருத்துறைப்பூண்டி சிவ அமுதன் நினைவாக, அவரது குடும்பத்தினா் ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள கட்டிலை மருத்துவமனைக்கு இலவசமாக வழங்கினா்.

இந்த கட்டில், திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கம் உதவியுடன், தலைமை மருத்துவா் சிவக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வை மருத்துவா் பாபு ஏற்பாடு செய்திருந்தாா்.

விழாவிற்கு, டெல்டா ரோட்டரி சங்கத் தலைவா் காளிதாஸ் தலைமைவகித்தாா். செயலாளா் பாலமுருகன், பொருளாளா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் தலைவா்கள் சுவாமிநாதன், சிவக்குமாா், செல்வகுமாா், தலைவா் தோ்வு ரமேஷ், முன்னாள் செயலாளா் மதன் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.