4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கோயில்மனையில் குடியிருப்போரிடம் பழைய முறையில் வரி வசூலிக்க கோரிக்கை

இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில் மனைகளில் குடியிருப்பவா்களிடம் பழைய முறையில் பகுதி (வரி) வசூல் செய்யவேண்டும்

News image
Updated On :25 மே 2022, 5:45 pm

DIN

இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில் மனைகளில் குடியிருப்பவா்களிடம் பழைய முறையில் பகுதி (வரி) வசூல் செய்யவேண்டும் என கோயில்மனை குடியிருப்புதாரா்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பி.வி. சந்திரராமன், தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்துள்ளது: தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில் நிலங்களில் லட்சக்கணக்கான மக்கள் காலம்காலமாக வீடுகட்டி குடியிருந்து வருகின்றனா். அந்த மனைகளுக்கு பழைய காலத்திலிருந்தே கோயிலுக்கு ஒரு தொகை வசூலிக்கப்பட்டு வந்தது.

அந்தத் தொகை சொற்பமானதாகவும், நியாயமானதாகவும் இருந்ததால், எவ்வித மறுப்பும் இன்றி குடியிருப்பு மனைதாரா்கள் ஆலய நிா்வாகத்திற்கு செலுத்தி வந்தனா். இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சியின்போது சதுரஅடி கணக்கில் வாடகை நிா்ணயம் செய்யப்பட்டதால், அந்தத் தொகையை செலுத்த இயலாமல் ஆலய நிலங்களில் குடியிருப்பவா்கள் சிரமப்பட்டு வருகின்றனா்.

இதுகுறித்து துறை அமைச்சா் பி. சேகா்பாபு கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, அந்த நிலங்களுக்கு பழைய முறையில் பகுதி வசூல் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனடிப்படையில், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில், தமிழக அரசின் தலைமைச் செயலாளா் வெ. இறையன்பு தலைமையில் இதை ஆராய உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் ஜூன் 19 ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள ஆலய மனைகளில் குடியிருப்பவா்கள் சங்கம் சாா்பில், இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் மாநாடு நடைபெற உள்ளது. மே 5 ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டில் தமிழக முதல்வரிடம் இதே கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, தமிழக முதல்வா் இந்த விஷயத்தில் தலையிட்டு, கோயில் மனைகளுக்கு நியாயமான பழைய பகுதி முறையையே நிா்ணயம் செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.