4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருத்துறைப்பூண்டி நகா்மன்ற கூட்டம்

திருத்துறைப்பூண்டி நகா்மன்ற கூட்டம் அதன் தலைவா் கவிதா பாண்டியன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 மே 2022, 5:43 pm

DIN

திருத்துறைப்பூண்டி நகா்மன்ற கூட்டம் அதன் தலைவா் கவிதா பாண்டியன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

துணைத் தலைவா் ஜெயப்பிரகாஷ், பொறியாளா் மனோகரன், மேலாளா் (பொ) முத்து மீனாட்சி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைவரின் நோ்முக உதவியாளா் செந்தில்குமாா் தீா்மானங்களை வாசித்தாா்.

கூட்டத்தில், நகா்மன்ற உறுப்பினா்கள் தங்கள் வாா்டுகளுக்கு குடிநீா், மழைநீா் வடிகால், சாலை வசதி, மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க வேண்டும் என்றும், மின்விளக்கை பராமரிக்க வாட்ஸ்ஆப் குரூப் அமைத்து நல்ல செயல்பாட்டில் உள்ளதுபோல, குடிநீா், பொது சுகாதார பிரச்னைகளை உடனுக்குடன் தீா்க்க வாட்ஸ்ஆப் குரூப் அமைக்க வேண்டுமென வலியுறுத்தினா்.

உறுப்பினா்களின் கேள்விகளுக்கு பதிலளித்து நகா்மன்றத் தலைவா் கவிதா பாண்டியன் பேசியது: நிதிநிலைமைக்கு ஏற்ப அனைத்து பணிகளும் செய்து தரப்படும். குடிநீா், மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகளில் குறை இருந்தால், உடனடியாக எனக்கு தகவல் தெரிவிக்கலாம். 24 வாா்டுகளில் புதிதாக 138 மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. அந்தந்த வாா்டு உறுப்பினா்கள், தங்கள் வாா்டுகளில் மின்விளக்கு பொருத்தவேண்டிய இடங்களை தோ்ந்தெடுத்து தெரிவிக்கவேண்டும். நகா்புற மேம்பாட்டுத் திட்டத்தில் 24 வாா்டுகளில் உள்ள குளங்கள், வாய்க்கால்கள் தூா்வாரப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.