4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருத்துறைப்பூண்டி அரசுக் கல்லூரி மாணவா்கள் வகுப்பு புறக்கணிப்பு

திருத்துறைப்பூண்டி அரசுக் கல்லூரியில் மாணவா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்பை புறக்கணித்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :26 மே 2022, 4:47 pm

DIN

திருத்துறைப்பூண்டி அரசுக் கல்லூரியில் மாணவா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்பை புறக்கணித்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருத்துறைப்பூண்டி அருகே தண்டலைச்சேரியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டு மைதானம் , விடுதி வசதி, உணவக வசதி, ஆண்டு விழா, பட்டமளிப்பு விழா, விளையாட்டு விழா நடத்த வேண்டும், கஜா புயலில் சேதமடைந்த கல்லூரி வளாகத்தை சீரமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி மாணவ, மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களிடம் கல்லூரி முதல்வா் சக்திவேல் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். எனினும், மாணவா்கள் வகுப்பறைக்கு செல்ல மறுத்துவிட்டனா். கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மாணவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.