மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருவாரூர், நாகை மாவட்ட பாசனத்திற்காக மூணாறு தலைப்பு அணை திறப்பு

நீடாமங்கலம் அருகேயுள்ள மூணாறு தலைப்பு அணையிலிருந்து குறுவை சாகுபடி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

News image
வெண்ணாறு.
Updated On :31 மே 2022, 8:12 am

DIN

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகேயுள்ள மூணாறு தலைப்பு அணையிலிருந்து குறுவை சாகுபடி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீடாமங்கலம் அருகேயுள்ளது மூணாறு தலைப்பு. இதனை கோரையாறு தலைப்பு எனவும் அழைப்பர்.

வருடந்தோறும் ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டு அந்த நீரானது கல்லணையை வந்தடைந்தவுடன் கல்லணை திறக்கப்படும். கல்லணை நீரானது பெரிய வெண்ணாற்றில் மூணாறு தலைப்பை வந்தடையும். 

பாமணியாறு.

பாமணியாறு.


மூணாறு தலைப்பிலிருந்து பிரியும் வெண்ணாறு, கோரையாறு, பாமணியாறு ஆகிய ஆறுகளின் மூலம் திருவாரூர், நாகை மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் 2022 - 2023 ஆம் ஆண்டு காவேரி டெல்டா குறுவை சாகுபடி பாசனத்திற்காக கடந்த மாதம் 24-ம்தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையை திறந்து வைத்தார். 


மேட்டூரிலிருந்து முதலில் 3000 கனஅடி திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக நிலை உயர்த்தி 10,000 கனஅடியாக எடுக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மே 27-ம் தேதி மாலை 5.00 மணி முதல் கல்லணையிலிருந்து டெல்டா குறுவை சாகுபடி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த நீரானது நீடாமங்கலம் அருகேயுள்ள மூணாறு தலைப்பு அணைக்கு  திங்கள்கிழமை இரவு வந்தடைந்தது.

கோரையாறு.

கோரையாறு.

அதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறையினரால் மூணாறு தலைப்பிலிருந்து திருவாரூர், நாகை மாவட்ட குறுவை சாகுபடி பாசனத்திற்காக முதலில் வெண்ணாற்றில் 208 கனஅடியும், கோரையாற்றில் 1024 கன அடியும்,பாமணியாற்றில் 410 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை 6 மணியிலிருந்து வெண்ணாற்றில் 917 கனஅடியும், கோரையாற்றில் 1349 கன அடியும், பாமணியாற்றில் 410 கன அடியும் மொத்தம் 2 ஆயிரத்து 676 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. 

மூன்று ஆறுகளிலும் சீறிப்பாய்ந்தோடும் இந்த நீரானது குறுவை சாகுபடிக்கு வெண்ணாற்றின் மூலம் 94 ஆயிரத்து 219 ஏக்கர் ,கோரையாற்றின் மூலம் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 957 ஏக்கர் ,பாமணியாற்றின் மூலம் 38 ஆயிரத்து 357 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.