குடிநீா் பிரச்னை: நீா்தேக்கத் தொட்டி இயக்குநரை கண்டித்து சாலை மறியல்
மன்னாா்குடி அடுத்த விக்கிரபாண்டியத்தில் குடிநீா் பிரச்னை காரணமான மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி இயக்குநரை கண்டித்து பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.


மன்னாா்குடி அடுத்த விக்கிரபாண்டியத்தில் குடிநீா் பிரச்னை காரணமான மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி இயக்குநரை கண்டித்து பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கோட்டூா் ஒன்றியத்துக்குள்பட்ட விக்கிரபாண்டியம் ஊராட்சி கீழத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகம் சீராக இல்லையென அப்பகுதி மக்கள் ஒன்றியக் குழு உறுப்பினா் அரவிந்திடம் புகாா் அளித்தனா். இது குறித்து, அவா் கீழத் தெரு உள்ளிட்ட பகுதிக்கு குடிநீா் விநியோகம் செய்யும் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி இயக்குநா் சுதாவிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்காமல் அவமதித்தாராம்.
இதையடுத்து, விக்கிரபாண்டியத்தில் அரவிந்த் தலைைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த கோட்டூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சிவக்குமாா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, நீா்தேக்கத் தொட்டி இயக்குநா் சுதாவை பணியிட மாற்றம் செய்வதுடன், உடனடியாக சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படும் என உறுதி அளித்ததையடுத்து, மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...