கூத்தாநல்லூர் பேருந்து நிலைய ரூ.3.53 கோடி கடன் தள்ளுபடி: புதிய பேருந்து நிலையம் அமைப்பு; எம்.எல்.ஏ., உறுதி

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பேருந்து நிலைய ரூ.3.53 கோடி கடனை தள்ளுபடி செய்து, புதிய பேருந்து நிலையக் கட்டடம் கட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூத்தாநல்லூர் பேருந்து நிலைய ரூ.3.53 கோடி கடன் தள்ளுபடி: புதிய பேருந்து நிலையம் அமைப்பு; எம்.எல்.ஏ., உறுதி

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பேருந்து நிலைய ரூ.3.53 கோடி கடனை தள்ளுபடி செய்து, புதிய பேருந்து நிலையக் கட்டடம் கட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது என சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் தெரிவித்துள்ளார்.

கூத்தாநல்லூர் நகராட்சியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பேருந்து நிலையம் பயன்பாட்டில் இல்லாமல் பழுதடைந்த நிலையில் உள்ளது. பழுதடைந்துள்ள இந்தப் பேருந்து நிலையத்தை புதுப்பித்து, மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்பாடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா தலைமையில், சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் முன்னிலையில், கூத்தாநல்லூர் நகராட்சி  பேருந்து நிலையத்தை நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது, நகராட்சி அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து, பேருந்து நிலையம் குறித்து, சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

கூத்தாநல்லூர் பேரூராட்சியாக இருந்த போது ரூ.30 லட்சம் கடனில் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. அந்தக் கடன் இதுவரை கட்டப்படவில்லை. கட்டப்பட்ட பேருந்து நிலையம், பயன்படுத்தப்படாமலேயே இடிந்து பழுதடைந்துள்ளது. மேலும்,அதற்காக ரூ.3 கோடியே 50 லட்சம் வட்டியும் கட்ட வேண்டியிருந்தது. கடன், வட்டி இரண்டுமாக மொத்தம் ரூ.3.53 கோடியாக உயர்ந்துள்ளது.

1997-ம் ஆண்டு முதல்வர் கருணாநிதியின் அரசாணைப்படி, கூத்தாநல்லூர் நகராட்சி  பேருந்து நிலையத்திற்கான ரூ.3.53 கோடி கடனை, தற்போதைய தமிழக அரசால் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கூத்தாநல்லூர் நகராட்சியின் கடன் சுமையும் குறைக்கப்பட்டுள்ளன. மேலும், மீண்டும் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. தேவையான நிதிகளை ஒதுக்கீடு செய்து, புதுப்பொலிவுடன் பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. பேருந்து நிலையத்திற்குள், வணிக வளாகமும் கட்டப்பட உள்ளது.

விரைவில், கூத்தாநல்லூர் நகராட்சி முதல் நிலை நகராட்சியாக மாறும் நிலைக்கு மாற்றப்படும் என்றார். நிகழ்வில், கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, நகர்மன்றத் தலைவர் மு.பாத்திமா பஷீரா, ஆணையர் கிருஷ்ணவேணி, துணைத் தலைவர் மு.சுதர்ஸன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com