ராஜஸ்தான்: காகிதத் தட்டு ஆலையில் பயங்கர தீ விபத்து

ராஜஸ்தான் மாநிலத்தின் மகுவா பகுதியில் காகித் தட்டு தயாரிக்கும் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

ராஜஸ்தான் மாநிலத்தின் மகுவா பகுதியில் காகித் தட்டு தயாரிக்கும் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து குறித்து காவல் துறை தரப்பில் கூறியிருப்பதாவது,” காகித் தட்டு தயாரிக்கும் ஆலையில் நேற்று (ஜூன் 10) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவர போராடினர். இருப்பினும், அவர்களால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், ஜெய்ப்பூரிலிருந்து மேலும் சில தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். இந்த தீ விபத்து காகித ஆலைக்குள் கச்சா எண்ணெய் இருப்பதானல் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த கச்சா எண்ணெய் ஆலைக்கு அருகிலுள்ள கச்சா எண்ணெய்க் குழாயிலிருந்து திருடப்பட்டிருக்க வேண்டும். கச்சா எண்ணெய் கசிவின் காரணத்தினாலேயே தீயைக் கட்டுக்குள் கொண்டு வருவது நீண்ட போராட்டமாக உள்ளது.” என்றனர்.

இந்த தீ விபத்து ஏற்ட்டதையடுத்து மாவட்ட ஆட்சியர் கும்மர் உல் சமான் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ராஜ்குமார் இருவரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

இந்த தீ விபத்திற்கு காரணம் ஆலையிலிருந்து வெளியேறுவதாகக் கூறப்படும் கச்சா எண்ணெய்யா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. 

இந்த விபத்திற்கு காரணம் கச்சா எண்ணெய்யாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும், ஆய்விற்குப் பின்னரே அதனை உறுதி செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com