கொருக்குப்பேட்டைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பிவைப்பு
By DIN | Published On : 16th June 2022 10:28 PM | Last Updated : 16th June 2022 10:28 PM | அ+அ அ- |

நீடாமங்கலத்திலிருந்து கொருக்குப்பேட்டைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் ரயிலில் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
நீடாமங்கலம், மன்னாா்குடி வட்டங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் தெற்கு நத்தம், மூவாநல்லூா், பாமணி, அசேஷம், ராஜகோபாலபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருந்து 2000 டன் சன்னரக நெல் லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன.
பின்னா், சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு, அரவைக்காக வட சென்னை கொருக்குப்பேட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.