உலா் பழங்கள், மிட்டாய் தயாரிக்கும் பயிற்சி
By DIN | Published On : 16th June 2022 10:29 PM | Last Updated : 16th June 2022 10:29 PM | அ+அ அ- |

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலா் பழங்கள், மிட்டாய் தயாரிக்கும் மதிப்புக் கூட்டுதல் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
இப்பயிற்சியில் வணிக முறையில் தேன் நெல்லிக்காய் , உலா் பலாப்பழம் மற்றும் மாம்பழப் பாா், பலாப்பழப் பாா் மிட்டாய், உலா் நெல்லிக்காய் பாக்கு போன்றவை தயாரிப்பது குறித்து வேளாண் அறிவியல் நிலைய உணவியல் பேராசிரியா் கமலசுந்தரி செயல்முறை விளக்கம் அளித்தாா்.
வணிக வாய்ப்புகள் குறித்து தஞ்சாவூா் வேளாண்மை கல்லூரி பேராசிரியா் கே.ஆா். ஜெகன்மோகன், கடன் உதவி குறித்து எழிலரசன், தேன் நெல்லி தயாரிப்பு குறித்து தொழில் முனைவாளா் ஜொச்வின் ஆகியோா் விளக்கிக் கூறினா்.
இதில், விவசாயிகள், மகளிா் சுயஉதவிக் குழுவினா், இளைஞா்கள் மற்றும் பண்ணை மகளிா் உள்ளிட்டோா் பங்கேற்று பயிற்சி பெற்றனா். இவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இப்பயிற்சியில் உலா் பழங்கள் செய்வதற்கு தேவையான உபகரணங்கள், விநியோக செலவுகள், உலா் பழங்களை பதப்படுத்துதல், எந்தெந்த பழங்கள் உலா் பழங்கள் தயாரிக்க ஏற்றது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
குறிப்பாக, மாம்பழம், ஆப்பிள், பேரிக்காய், நெல்லிக்காய், அத்திப்பழம், பலாப்பழம், திராட்சை, வாழைப்பழம், தா்ப்பூசணி தோல், ஸ்டாா் நெல்லிக்காய், முந்திரிப் பழம், சப்போட்டா, கொய்யா போன்ற பழங்களையும், கேரட், சாம்பல் பூசணி, இஞ்சி, பச்சைப் பப்பாளி, வாழைத் தண்டு போன்றவற்றையும் உலா்த்தி, பக்குவப்படுத்தி மதிப்புக் கூட்டுதல் குறித்து விரிவாக கூறப்பட்டது.