மேக்கேதாட்டு விவகாரம்: கோட்டூரில் இந்திய கம்யூ. கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 22nd June 2022 05:16 PM | Last Updated : 22nd June 2022 05:16 PM | அ+அ அ- |

கோட்டூரில் நடைபெற்ற கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்.
மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கோட்டூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மேக்கேதாட்டு அணைத் திட்டத்திற்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின் படி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 177.25 டிஎம்சி தண்ணீரை காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் உறுதி செய்ய வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் புதிதாக அணைக்கட்டும் முயற்சியினை கர்நாட அரசு கை விட வேண்டும். இதனை மத்தியஅரசும், காவிரி மேலாண்மை வாரியமும் தடுத்து நிறுத்திட வேண்டும். ஆணையத்தின் தலைவர் நடுநிலையோடு செயல்படாமல் ஒருதலைபட்சமாக நடந்துக் கொள்வதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையும் படிக்க: யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகின!
கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ கே.மாரிமுத்து தலைமை வகித்தார்.
இதில்,சிபிஐ ஒன்றியச் செயலர் எம்.செந்தில்நாதன், சிபிஎம் ஒன்றியச் செயலர் எல்.சண்முகவேல், விவசாய சங்க ஒன்றியச் செயலர் பி.பரந்தாமன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலர் ஜெ.ஜெயராமன், கோட்டூர் ஒன்றியக் குழுத் தலைவர் மு.மணிமேகலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் கலந்துகொண்டவர்கள் கட்சி கொடிகளுடன் கருப்புக்கொடி ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...