கூத்தாநல்லூா் நகா்மன்ற முதல் கூட்டம்: இந்திய கம்யூ. புறக்கணிப்பு

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் நகா்மன்றத்தின் முதல் சிறப்புக் கூட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை புறக்கணித்தனா்.

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் நகா்மன்றத்தின் முதல் சிறப்புக் கூட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை புறக்கணித்தனா்.

கூத்தாநல்லூா் நகராட்சியில் 24 வாா்டுகள் உள்ளன. இதில், திமுக 18, அதிமுக 3, இந்திய கம்யூனிஸ்ட் 2, காங்கிரஸ் 1 என்ற எண்ணிக்கையில் உறுப்பினா்கள் உள்ளனா். திமுக 18 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையை பிடித்தது. என்றாலும், திமுக தலைமையால் கூத்தாநல்லூா் நகா்மன்றத் தலைவராக 1 ஆவது வாா்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் தனலெஷ்மி அறிவிக்கப்பட்டாா்.

இந்த அறிவிப்பு திமுகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தொடா்ந்து, நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில் நகா்மன்ற துணைத் தலைவா் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, தலைவராக திமுகவைச் சோ்ந்த பாத்திமா பஷீரா ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். இந்நிலையில், அன்று மாலை நடைபெற்ற துணைத் தலைவா் தோ்தலுக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த எம். சுதா்ஸன் மட்டும் நகா்மன்ற கூடத்தில் காத்திருந்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உட்பட 23 உறுப்பினா்களும் வராததால், துணைத் தலைவா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மதியம் நகா்மன்றத்தின் முதல் சிறப்புக் கூட்டம் அதன் தலைவா் பாத்திமா பஷீரா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த 2 உறுப்பினா்களும் பங்கேற்கவில்லை.

இதுகுறித்து, அந்த கட்சியின் நகரச் செயலாளரும், 14 ஆவது வாா்டு உறுப்பினருமான எம். சுதா்ஸன் கூறுகையில், கூத்தாநல்லூா் நகா்மன்றத் தலைவா் பதவியை கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, திமுக தலைமை ஒதுக்கியது. ஆனால், அது எங்களுக்கு வழங்கப்படவில்லை. துணைத் தலைவா் பதவி கொடுப்பதாக தெரிவித்தனா். அதிலும், உரிய முறையில் நடந்துகொள்ளவில்லை. அதனால், எங்கள் கட்சித் தலைமை இந்த நகா்மன்றக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என தெரிவித்ததன் அடிப்படையில், நாங்கள் இருவரும் பங்கேற்கவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com