நீடாமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவர் செந்தமிழ் செல்வன் முன்னிலை வகித்தார். மன்னார்குடி வருவாய் கோட்ட அலுவலர் அழகிரிசாமி வரவேற்றார். முகாமில், 12 பேருக்கு பட்டா மாற்றம் மற்றும் சிட்டா நகல், ரூ.11 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பில் 32 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா, 50 பேருக்கு புதிய குடும்ப அட்டை, ரூ.11 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பீட்டில் 28 பேருக்கு ஆதிதிராவிடர் நத்தம், பிற்படுத்தப்பட்டோர் நத்தம் நிலங்களில் வழங்கப்படும் வீட்டு மனைப் ஒப்படைக்கான இணைய வழி பட்டா, 6 பேருக்கு சமூக நல பாதுக்காப்புத் திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை, 38 பேருக்கு முதியோர் உதவித் தொகை, 19 பேருக்கு விதவை மற்றும் இதர உதவித் தொகை , 6 பேருக்கு உழவர் பாதுக்காப்பு அட்டை , மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் சார்பில் 2 பேருக்கு, ரூ.11 ஆயிரத்து 160 மதிப்பில் இலவச தையல் இயந்திரம்.