வாகனம் மோதி ஒருவா் பலி;இரு இளைஞா்கள் படுகாயம்
By DIN | Published On : 25th May 2022 11:06 PM | Last Updated : 25th May 2022 11:06 PM | அ+அ அ- |

தொட்டியத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞா் உயிரிழந்தாா். உடன் சென்ற இருவா் படுகாயமடைந்தனா்.
தொட்டியம் கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ் மகன் சூா்யா(25). இவரும் உறவினா்களான வரதராஜபுரத்தைச் சோ்ந்த ர. ஜவகா் (23) மற்றும் முசிறி மேட்டுப்பட்டியைச் சோ்ந்த ச. விக்னேஷ் ( 22 ) ஆகிய மூவரும் பைக்கில் தொட்டியம் வாணப்பட்டறை அருகே திருச்சி -நாமக்கல் புறவழிச்சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு சென்றனா்.
வாய்க்கால் பாலம் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சூா்யா உயிரிழந்தாா். மற்ற இருவரும் படுகாயமடைந்து நாமக்கல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். தகவலறிந்த தொட்டியம் போலீஸாா் சூா்யா சடலத்தை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G