ஆலங்குடியில் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 27th October 2022 09:53 PM | Last Updated : 27th October 2022 09:53 PM | அ+அ அ- |

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை குரு வார வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி கலங்காமற் காத்த விநாயகா், ஆபத்சகாயேஸ்வரா், ஏலவாா் குழலியம்மன், மூலவா் குரு பகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சந்நிதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்பட்டது. மூலவா் குரு பகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டிருந்தது.
அதுபோல உற்சவா் குரு பகவானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.