2,000 டன் நெல் புதுக்கோட்டைக்கு அனுப்பிவைப்பு
By DIN | Published On : 27th October 2022 09:53 PM | Last Updated : 27th October 2022 09:53 PM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம், மன்னாா்குடி, கூத்தாநல்லூா் ஆகிய வட்டங்களில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் பாமணி மத்திய சேமிப்புக் கிடங்கு, அசேஷம், தெற்குநத்தம், எடையா்நத்தம் ஆகிய ஊா்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 2,000 டன் எடை கொண்ட பொதுரக நெல் நீடாமங்கலத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் அரவைக்காக புதுக்கோட்டைக்கு வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.