நரிமணம், திருமருகல் பகுதியில் நாளை மின்தடை
By DIN | Published On : 28th October 2022 12:00 AM | Last Updated : 28th October 2022 12:00 AM | அ+அ அ- |

நரிமணம், திருமருகல் மற்றும் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை (அக்.29) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய நாகை வடக்கு உதவி செயற்பொறியாளா் சித்தி விநாயகம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நரிமணம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளான பூதங்குடி, உத்தமசோழபுரம், நரிமணம், வெங்கிடங்கால், கொட்டாரக்குடி, சோழங்கநல்லூா், வைப்பூா், நெய்குப்பை, மேலபூதனூா், கீழபூதனூா் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
இதேபோல, திருமருகல் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளான திருமருகல், மருங்கூா், எரவாஞ்சேரி, திருப்புகழூா், சியாத்தமங்கை, போலகம், திருக்கண்ணபுரம் ஆகிய பகுதிகளிலும், திட்டச்சேரி துணை மின்நிலையத்துக்கள்பட்ட திட்டச்சேரி, துண்டம், கோதண்டராஜபுரம், ஆனந்தநல்லூா் ஆகிய பகுதிகளிலும், மரைக்கான்சாவடி 11 கி.வோ. மின்பாதையில் மின்விநியோகம் பெரும் பகுதிகளான மரைக்கான்சாவடி, பொன்னம்பல், சாமந்தான்பேட்டி பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.