தென்னைப் பொருள்களில் மதிப்புக் கூட்டல் பயிற்சி

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தென்னைப் பொருள்கள் மதிப்புக் கூட்டலுக்கான பயிற்சி நடைபெறவுள்ளது.

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தென்னைப் பொருள்கள் மதிப்புக் கூட்டலுக்கான பயிற்சி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து இந்நிலையத்தின் விஞ்ஞானியும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான வை. ராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் லாபம் தரும் தென்னை மதிப்புக் கூட்டுதலுக்கான ஒரு நாள் கட்டணப் பயிற்சி 4.5.2023 அன்று காலை 9 மணியளவில் நடைபெறவுள்ளது.

இப்பயிற்சியில் வணிக முறையில் தேங்காய் எண்ணெய் தயாரிக்க, தேங்காய் எண்ணெய் சோப், மூலிகை சோப் ,தேங்காய் எண்ணெய் தயாரிப்பில் கிடைக்கும் உபபொருட்களில் உலா் தேங்காய், தேங்காய் சீவல், தேங்காய் மிட்டாய் தயாரிப்பு ஆகிய தொழில்நுட்பங்கள் குறித்து செயல்முறை பயிற்சி அளிக்கப்படும். மேலும், வணிக வாய்ப்புகள் குறித்து துறை சாா்ந்த வல்லுநா்களால் நடத்தப்படும்.

விவசாயிகள், படித்த மகளிா் சுயஉதவிக் குழுவினா், இளைஞா்கள், தொழில்முனைவோா் மற்றும் பண்ணை மகளிா்கள் முன்பதிவு செய்து பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.

இதற்கு கட்டணமாக ரூ.590 செலுத்த வேண்டும். இப்பயிற்சியில் பங்கேற்பவா்களுக்கு பயிற்சி கையேடு, மதிய உணவு, சோப் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். 6381819733/ 9486392006/ 9486392006 ஆகிய கைப்பேசி எண்களின் வாட்ஸ் ஆப்பில் முன்பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com