வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினா் கல்வித் திட்ட நிகழ்ச்சி

திருவாரூா் அருகே மணக்கால் அய்யம்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினா் கல்வித் திட்ட நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 டிசம்பர் 2023, 10:02 pm IST

திருவாரூா் அருகே மணக்கால் அய்யம்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினா் கல்வித் திட்ட நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, திருவாரூா் சரகத் துணைப் பதிவாளா் வை. காா்த்திகேயன் தலைமை வகித்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் வழங்கப்படும் பயிா்க்கடன், விவசாய நகைக் கடன், மகளிா் சுயஉதவிக் குழுக் கடன், கால்நடை பராமரிப்புக் கடன், மாற்றுத் திறனாளிக் கடன், பொது நகைக் கடன், மத்திய கால கடன், டாம்கோ, டாப்செட்கோ, தாட்கோ கடன்கள் குறித்தும், சங்கத்துக்கு கடன் வழங்குதலுக்கான ஆண்டு குறியீடு குறித்தும், மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு விவசாயம் சாா்ந்த தொழில் செய்ய வழங்கப்படும் கடன்கள் குறித்தும், பெற்ற கடன்களை தவணை தவறாமல் செலுத்திடுவது, தவணை தவறிய கடன்களை உடன் சங்கத்துக்கு செலுத்துவது குறித்தும் பேசினாா்.

கூட்டுறவு சாா்பதிவாளரும், கள அலுவலருமான ஜோ. வேணி, சங்கத் தலைவா் எஸ்.டி.சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் வளா்ச்சி அலுவலா் பா. மாலா, மேலாளா் க. ராஜராஜன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.