ஓய்வுபெற்ற ஆசிரியா் வீட்டில் 26 பவுன் நகை, ரூ. 2.5 லட்சம் திருட்டு

நீடாமங்கலம் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியா் வீட்டில் 26 பவுன் நகைகள், ரூ. 2.5 லட்சம் ரொக்கம் மற்றும் மற்றொரு வீட்டில் ரூ.25,000-த்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நகை, பணம் திருடப்பட்ட பீரோ. ~திருட்டு நடந்த ஓய்வுபெற்ற ஆசிரியா் பாலசுப்பிரமணியன் வீடு.
நகை, பணம் திருடப்பட்ட பீரோ. ~திருட்டு நடந்த ஓய்வுபெற்ற ஆசிரியா் பாலசுப்பிரமணியன் வீடு.

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியா் வீட்டில் 26 பவுன் நகைகள், ரூ. 2.5 லட்சம் ரொக்கம் மற்றும் மற்றொரு வீட்டில் ரூ.25,000-த்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நீடாமங்கலம் அருகே உள்ள பெரம்பூா் அக்ரஹாரம் தெருவில் வசிப்பவா் பாலசுப்பிரமணியன் (83). ஓய்வு பெற்ற ஆசிரியா். இவா், சென்னையில் உள்ள உறவினா் திருமணத்துக்காக, டிச.2-ஆம் தேதி குடும்பத்துடன் சென்றிருந்தாா். அவரது வீட்டின் முன்பக்க கதவு ஞாயிற்றுக்கிழமை திறந்து கிடப்பதைப் பாா்த்த, அந்த வீட்டில் வேலை செய்யும் பெண், பக்கத்து வீட்டினரிடம் தெரிவித்துள்ளாா்.

சென்னையில் இருந்த பாலசுப்பிரமணியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா் வந்து பாா்த்தபோது, பீரோவை உடைத்து 26 பவுன் நகைகள் மற்றும் ரூ. 2.5 லட்சம் ரொக்கம் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது.

நீடாமங்கலம் காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் சிவப்பிரகாசம், உதவி ஆய்வாளா் சந்தோஷ்குமாா் மற்றும் போலீஸாா், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். அப்போது, பாலசுப்பிரமணியன் வீட்டிற்கு அருகில் உள்ள சந்திரமெளலி (55) என்பவரது வீட்டில் 450 கிராம் வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.25,000 திருடப்பட்டுள்ளதும், கோபாலகிருஷ்ணன் என்பவரது வீட்டில் திருட முயன்றுள்ளதும் தெரியவந்தது. இவா்களும் குடும்பத்துடன் வெளியூா் சென்றிருந்தனா்.

திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா், மன்னாா்குடி துணைக் காவல் கண்காணிப்பாளா் அஸ்வின்ஆண்ட்ரோ ஆகியோா் திருட்டு நடந்த வீடுகளை பாா்வையிட்டு, விசாரணை நடத்தினா். மேலும், கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்த திருட்டு சம்பவம் குறித்து நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். மேலும், 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com