எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மன்னார்குடியில் பெரியார் சிலைக்கு திமுக பொருளாளர் டி. ஆர் .பாலு மரியாதை

மன்னார்குடியில் தந்தை பெரியார் சிலைக்கு திமுக பொருளாளர் டி. ஆர் .பாலு மாலை அணிவித்தார்.

News image
மன்னார்குடி உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் திமுக பொருளாளரும் எம்பியுமான டி.ஆர்.பாலு.
Updated On :24 டிசம்பர் 2023, 7:10 am

DIN

மன்னார்குடியில் தந்தை பெரியார் சிலைக்கு திமுக பொருளாளர் டி. ஆர் .பாலு மாலை அணிவித்தார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் தந்தை பெரியார் 50-ஆவது நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. மன்னார்குடி மேலராஜ வீதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு திமுக பொருளாளரும் எம்பியுமான டி.ஆர்.பாலு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் , மாவட்ட ஊராட்சித் தலைவர் ஜி.பாலு , திமுக நகரச் செயலாளர் வீரா. கணேசன், மன்னார்குடி தெற்கு ஒன்றியச் செயலாளர் டி.எஸ்.டி. முத்துவேல் , மத்திய ஒன்றிய செயலாளர் சித்தேரி சிவா, கோட்டூர் ஒன்றியச் செயலாளர் வி.எஸ்.ஆர்.தேவதாஸ், பால.ஞானவேல், மன்னார்குடி நகர மன்றத் தலைவர் மன்னை  த.சோழராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

திராவிட கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் தலைமையில்  தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில்,நகரத் தலைவர் எஸ்.என்.உத்ராபதி,நகரச் செயலாளர் மு.ராமதாசு, ஒன்றியத் தலைவர் மு. தமிழ்ச்செல்வம், மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ். அன்பழகன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வை.கெளதமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதே போன்று மன்னார்குடியை அடுத்துள்ள உள்ளிக்கோட்டை, மேலவாசல், வடுவூர், செருமங்கலம்,மேல திருப்பாலைக்குடி, கோட்டூர், விக்கிரபாண்டியம் ஆகிய இடங்களில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.