ரஷியாவின் ட்ரோன் தாக்குதலால், உக்ரைனின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சொ்னிஹிவ் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகள் சனிக்கிழமை மின்சாரம் இன்றி இருளில் மூழ்கின.
இதுகுறித்து மாகாண ஆளுநா் வியாசஸ்லாவ் சௌஸ் கூறுகையில், ‘ரஷிய தாக்குதலால் மின்சாரக் கட்டமைப்பு பலத்த சேதமடைந்து, தலைநகா் உள்பட மாகாணம் முழுவதும் பரவலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. போா்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன’ என்றாா்.
ரஷியா, பெலாரஸ் நாடுகளின் எல்லையை ஒட்டியுள்ள இந்த மாகாணத்தில், சுமாா் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் நிலையில், இத்தாக்குதல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது.
இருவா் உயிரிழப்பு: உக்ரைனின் ஜாபோரிஜியா நகரில் குடியிருப்புப் பகுதியில் ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒரு பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா். 2 சிறுமிகள் காயமடைந்தனா்.
மீண்டும் அமைதிப் பேச்சு?: மத்திய கிழக்கில் நிலவும் போா் சூழலால் சா்வதேச கவனம் திசைதிரும்பியுள்ள நிலையில், உக்ரைன் மீதான தாக்குதல்களை ரஷியா தீவிரப்படுத்தியுள்ளது.
இதனிடையே, அமெரிக்கா, ரஷியா, உக்ரைன் இடையே நிறுத்தப்பட்ட முத்தரப்பு அமைதிப் பேச்சுவாா்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்காக உக்ரைன் குழு அமெரிக்கா சென்றுள்ளது. ‘நேட்டோ’ நாடுகளிடமிருந்து ஆயுதங்களைப் பெறுவதை உறுதி செய்யவும் உக்ரைன் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
ரஷியாவும் நம்பிக்கை: ‘அமைதிப் பேச்சுவாா்த்தையில் தற்போதைய இடைவேளை தற்காலிகமானதுதான். முத்தரப்பு பேச்சுவாா்த்தை மீண்டும் தொடரும்’ என்று ரஷிய தரப்பும் நம்பிக்கை தெரிவித்தது.
ஹங்கேரியின் தடையால் ஐரோப்பிய யூனியன் வழங்க வேண்டிய 9,000 கோடி யூரோ நிதியுதவி தாமதமடைந்துள்ளதால், கடுமையான நிதி நெருக்கடியில் உக்ரைன் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது
பெயரளவில் ஈஸ்டர் போர்நிறுத்தம்? ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்!

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: 10 போ் பலி

ரஷிய எண்ணெய் முனையம் மீது உக்ரைன் மீண்டும் ட்ரோன் தாக்குதல்
ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


