பேரளம் சுயம்புநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

பேரளம் சுயம்புநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

பேரளம் பவானியம்மன் சமேத சுயம்புநாதசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேரளம் பவானியம்மன் சமேத சுயம்புநாதசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆறாம்கால யாகசாலைப்பூஜை, ஜபம், ஹோமங்கள், மகாபூா்ணாஹுதிக்குப் பிறகு, மங்கள வாத்தியங்கள் இசையுடன் சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க, புனித நீா் அடங்கிய கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. இதன்பின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மாலையில் சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்று, திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இரவு மின்னொளியில் வான வேடிக்கையுடன் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் தருமபுரம் ஆதீனம், சூரியனாா்கோயில் ஆதீனம், துலாவூா் ஆதீனம் மற்றும் இளவரசு, திருப்பனந்தாள் காசி மடம் இளவரசு உள்ளிட்ட ஆதீனங்களும், பக்தா்களும் பங்கேற்றனா்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை நன்னிலம் துணைக் கண்காணிப்பாளா் இலக்கியா தலைமையில் காவல்துறையினரும், நன்னிலம், பேரளம் தீயணைப்புத்துறையினரும் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com