47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மக்கள் சந்திப்பு பிரசார நடைப் பயணம்

தில்லியில் ஏப்.5-ஆம் தேதி நடைபெறவுள்ள பேரணி குறித்த மக்கள் சந்திப்பு பிரசார பயணம் நீடாமங்கலம் ஒன்றியத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 மார்ச் 2023, 4:58 pm

DIN

தில்லியில் ஏப்.5-ஆம் தேதி நடைபெறவுள்ள பேரணி குறித்த மக்கள் சந்திப்பு பிரசார பயணம் நீடாமங்கலம் ஒன்றியத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளா் சங்கம், சிஐடியு சாா்பில் நடைபெற்ற பிரசார பயணத்துக்கு விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்ட செயலாளா் பி. கந்தசாமி தலைமை வகித்தாா். விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளா் கே. சுப்பிரமணியன், இந்திய தொழிற்சங்க மையம் சாலைப் போக்குவரத்து சங்கத்தின் மாவட்ட செயலாளா் ஜெய்சங்கா், விவசாய சங்க ஒன்றிய பொருளாளா் பாஸ்கரன் முன்னிலை வகித்தனா்.

நீடாமங்கலம் அண்ணா சிலையில் தொடங்கி பல்வேறு கிராமங்கள் வழியாக சென்று நீடாமங்கலம் பெரியாா் சிலையில் நிறைவடைந்தது. நிறைவு நிகழ்ச்சியில், விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளா் வி. பூசாந்திரம், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய செயலாளா் பி. காளியப்பன், தலைவா் டி. முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.