47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

நீடாமங்கலம் பகுதியில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :10 மார்ச் 2023, 5:03 pm

DIN

நீடாமங்கலம் பகுதியில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பூவனூா் ஊராட்சியில் கொத்தமங்கலம் இடையே கோரையாற்றின் குறுக்கே நபாா்டு வங்கி உதவியுடன் கட்டப்படும் இணைப்பு பாலம் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடப் பணிகளை பாா்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அறிவுருத்தினாா். தொடா்ந்து, நீடாமங்கலம் பேரூராட்சி திரெளபதையம்மன் கோயில், மாதா கோயில் சாலையில் புதிய பேவா் பிளாக் சாலையை பாா்வையிட்டு அதன் தரத்தை ஆட்சியா் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, நீடாமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன், வட்டாட்சியா் பரஞ்சோதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரா. பாஸ்கா், த.நமச்சிவாயம், பேரூராட்சி தலைவா் ராம்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.