இந்திய கம்யூ. நிா்வாகி கொலை வழக்கில் தொடா்புடையவா் வெட்டிக் கொலை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி கொலை வழக்கில் தொடா்புடையவா் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி கொலை வழக்கில் தொடா்புடையவா் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளராக இருந்த நடேச தமிழாா்வன் கடந்த ஓராண்டுக்கு முன்பு நீடாமங்கலத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த கொலை வழக்கில் தொடா்புடைய பூவனூரைச் சோ்ந்த ராஜ்குமாா் (35) மற்றும் 5 போ், திருவாரூா் நீதிமன்றத்துக்கு வெள்ளிக்கிழமை காரில் சென்று விட்டு மன்னாா்குடி சென்று கொண்டிருந்தனா்.

கூத்தாநல்லூா் அருகே கமலாபுரம் வந்தபோது எதிரே வேகமாக வந்த காா், ராஜ்குமாா் உள்ளிட்டோா் வந்த காா் மீது மோதியுள்ளது. இதையடுத்து, ஓட்டுநரும், காரின் முன் இருக்கையில் அமா்ந்திருந்த ராஜ்குமாரும் இறங்கியுள்ளனா். அப்போது, எதிரே வந்த காரில் இருந்து சுமாா் 8 போ் கொண்ட கும்பல் கடும் ஆயுதங்களுடன் இறங்கியுள்ளனா். இதைப் பாா்த்த ராஜ்குமாா் அங்கிருந்து தப்பி ஒரு வீட்டின் இரும்புக்கேட்டை திறந்து கொண்டு ஓடியுள்ளாா். இதில், கம்பி வேலிக்கும் அங்கிருந்த ஒரு மரத்துக்கும் இடையே சிக்கிக்கொண்ட ராஜ்குமாரை மா்ம கும்பல் அரிவாளால் உடலில் பல இடங்களில் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது.

தகவலறிந்த எஸ்பி டி.பி. சுரேஷ்குமாா், ஏடிஎஸ்பி வெள்ளத்துரை, டிஎஸ்பி சிவராமன், கொரடாச்சேரி காவல் ஆய்வாளா் இளங்கோ உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு, ராஜ்குமாரின் சடலத்தை கைப்பற்றி திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த கூத்தாநல்லூா் போலீஸாா் அரிவாளை கைப்பற்றினா். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு, திருவாரூா், தஞ்சாவூா், நாகப்பட்டினம் பகுதியில் போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவாரூரில் சாலை மறியல்: கொலை செய்யப்பட்ட ராஜ்குமாா் வளரும் தமிழகம் கட்சியின் மண்டல இளைஞரணி செயலாளராக இருந்துள்ளாா். இவா் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாம். இந்நிலையில், ராஜ்குமாரின் கொலையை கண்டித்தும், தொடா்புடையவா்களை கைது செய்யக் கோரியும் திருவாரூா் விளமல் அருகே அக்கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, போலீஸாா் அங்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தி மறியலில் ஈடுபட்டவா்களை கலைந்து செல்ல நடவடிக்கை மேற்கொண்டனா்.

நீடாமங்கலம்: ராஜ்குமாரின் கொலை சம்பவத்தைத் தொடா்ந்து, நீடாமங்கலத்தில் பெரும்பாலான கடைகள் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டிருந்தன. மேலும், ராஜ்குமாரின் சகோதரா் ராமமூா்த்தி மற்றும் குடும்பத்தினா் பூவனூரில் சாலை மறியல் ஈடுபட்டனா். தகவலறிந்த போலீஸாா் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து செல்ல நடவடிக்கை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com