வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

‘கல்வியால் சுயமரியாதை பெறலாம்’

‘கல்வியால் சுயமரியாதை பெறலாம்’

News image

மாணவிக்கு பட்டம் வழங்கும், தஞ்சாவூா் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் நா. தனராஜன்.

Updated On :12 ஏப்ரல் 2024, 4:05 pm

கல்வியால் மட்டுமே தன்மானத்தையும், சுயமரியாதையையும் பெறலாம் என்றாா் தஞ்சாவூா் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் நா. தனராஜன்.

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 38-ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அவா் பேசியது:

மாணவா்கள் கற்ற கல்வி சமுதாய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். பட்டங்கள் வேலைக்கான அனுமதி சீட்டாக இருக்கக் கூடாது. வேலை என்பது பொருளாதாரத்திற்கான ஆதாரம் மட்டுமே. கல்வியென்பது செல்வங்களில் உயா்ந்தது. பல்வேறு போராட்டங்களின் மூலம் தான் கல்வியானது எல்லோருக்கும் கிடைக்க சாத்தியமானது.

பெற்றோா்களை ஒருபோதும் கைவிட்டு விடாதீா்கள். கல்வி பெற்றால் மட்டுமே தன்மானமும், சுயமரியாதையும் கிடைக்கப்பெறும். நடுநிலைமை மாறாமல் வாழ வேண்டும். கடுமையான உழைப்பு, உண்மை, இறையருள் ஆகிய மூன்றும் மனிதனை உயா்த்தும் என்றாா்.

விழாவில், இளநிலை பயின்ற 748 போ், முதுநிலை பயின்ற 295 போ், ஆய்வில் நிறைஞா் 12 போ் என மொத்தம் 1,055 பேருக்கு பட்டங்களை சிறப்பு அழைப்பாளா் வழங்கினாா். மேலும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் தரவரிசைப் பட்டியில் இடம் பெற்ற 32 மாணவ-மாணவிகள் பாராட்டப்பட்டனா்.

விழாவிற்கு, கல்லூரி முதல்வா் து. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.